பெண் எம்.பி ஒருவர் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி-யான ஸ்டெல்லா கிரீசி என்பவர் தனது கைக்குழந்தையுடன் அவையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவையில் அமைதியாக இருந்த ஸ்டெல்லா கிரீசிக்கும் அவரது குழந்தைக்கும் பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜேக்கப் ரீஸ் மோக் என்பவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஸ்டெல்லா கிரீசி கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த போது அவருக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் ஸ்டெல்லா கிரீசிக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் தொகுதி பணிகளை மட்டும் மேற்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசவோ வாக்களிக்கவோ அவருக்கு அனுமதி வழங்கபடவில்லை.