Categories
அரசியல் மாநில செய்திகள்

திரும்ப திரும்ப தப்பு பண்ணுறீங்க…. எப்போது புரிஞ்சுப்பீங்க… ஸ்டாலின் எச்சரிக்கை …!!

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்! என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |