சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம், சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 2011க்கு முன்பு எப்படி இருந்தது ? 2011 இல் இருந்து 2021 வரை எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த பத்து ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொற்கால ஆட்சியில் இந்தத் திட்டங்கள் எல்லாம் நடைபெற்றது.
அதற்கு என்ன காரணம் ? எனக்கு ஒரு வாய்ப்பு தந்தீர்கள். சேலம் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் என்ற ஒரு வாய்ப்பை தந்தீர்கள். அதுமட்டுமில்லாமல் அம்மா மறைவுக்குப் பிறகு தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பும் நீங்கள் கொடுத்தீர்கள். அதனால் சேலம் மாவட்டத்தில் அபரிதமான வளர்ச்சி. ஏனென்றால் இந்த மாவட்டத்தில் என்ன பிரச்சனை என்று நன்கு அறிந்தவன்.
கிட்டத்தட்ட பல ஆண்டுகாலமாக கட்சியின் மாவட்ட செயலாளராக பண்ணியாச்சியவன். சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவன். சேலம் மாவட்டம் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றியவன். சேலம் மாவட்ட திருக்கோவில் வாரிய தலைவராக பணியாற்றியவன். ஆகவே மாவட்டத்தில் மூளை முடுக்கு அத்தனையுமே நன்கு எனக்கு பரிச்சாத்த முறையிலே தெரியும். அதனால் எந்த பகுதியிலே என்ன பிரச்சனை?
அந்த பகுதியில் இருக்கின்ற மக்கள் அணுகி என்னிடத்தில் சொல்கின்ற போது, அதை தீர்த்து வைத்த காரணத்தினால் இன்றைக்கு சேலம் மாவட்டம் தமிழகத்திலே ஒரு முதன்மை மாவட்டமாக இன்றைக்கு காட்சி அளிக்கின்றது. இன்றைக்கு சேலம் மாநகரம் வளர்ந்து வருகின்ற மாநகரம். அதற்கேற்றவாறு போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதற்க்காக எங்கெங்கெல்லாம் பொதுமக்கள் பாலங்கள் கேட்டார்களோ, அங்கெல்லாம் உயர்மட்ட பாலத்தை கட்டிக் கொடுத்து, இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக சேலம் மாநகரம் திகழ்கின்றது என பெருமிதம் கொண்டார்.