YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் வங்கியான YES பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு , மருத்துவ செலவு என அவசரத்திற்காக அதற்கு மேல் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் கடிதம் எழுதிக் கொடுத்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்களின் பணம் கிடைக்குமா ? என்ற குழப்பமான நிலை வாடிக்கையாளர்களுக்கு எழுந்ததை தொடர்ந்து ராகுல் காந்தி உட்பட பலர் ரிசர்வ் வங்கி நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , YES வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பணமும் பாதுகாப்பாக உள்ளது. YES வங்கியின் முதலீட்டாளர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உத்தரவாதம் அளித்துள்ளார். YES வங்கி பிரச்சனைக்கு தீர்வுகான ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. YES வங்கியில் 50,000 வரை பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.