Categories
உலக செய்திகள்

“பணம் சம்பாதிக்கலாம்” மாணவிகளிடம் ஆபாச படம் கேட்ட…. ஆசிரியரின் மோசமான செயல்…!!

ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவிகளின் ஆபாசமான புகைப்படங்களை வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் உள்ள Cardiff பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் Richard Edmunds(40). இவர் தன்னிடம் கல்வி கற்று வந்த மாணவிகளிடம் நைசாக பேசி தொழில்நுட்ப ரீதியான விஷயங்களுக்கு புகைப்படம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர்களை அதிகமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவர்களிடம் புகைப்படங்களையும் கேட்டு வாங்கியுள்ளார். இப்படி சில மாணவிகள் தங்களின் நிர்வாண புகைப்படங்களையும் இவருக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இவர் அந்த மாணவிகளிடம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசையும் காட்டியுள்ளார்.

இப்படி ஆசை வர்த்தி கூறி 16 வயது மாணவி ஒருவரிடம் இருந்து 30 புகைப்படங்கள் கேட்டு வாங்கியுள்ளார். மேலும் பல மாணவர்களிடம் 200 புகைப்படங்கள் தனக்கு வேண்டும் எனவும் அப்படி அனுப்பினால் நிறைய பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த தகவல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

இது குறித்த காவல்துறையினரின் விசாரணையில் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கணினியைப் பரிசோதித்து பார்த்தபோது ஆயிரக்கணக்கான அநாகரிகமான மற்றும் தவறான புகைப்படங்கள் இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ந்து போயுள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவருக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |