Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம்: உயர்நீதிமன்ற கிளை

இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி,  செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்டுகளில் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற கிளை. இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

ஆய்வு செய்வதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தென்காசி, நெல்லை, கோவை, குமரி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். விதிமீறலில் கண்டறியப்பட்டால் ரிசார்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். ரிசார்டுகளில் வணிக நோக்கத்துடன் செயற்கை அருவிகள் உருவாக்கப்படுகின்றன என்ற குற்றசாட்டு குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |