தடுப்பூசி போடுவதற்காக நீண்டநேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவும் காரணத்தினால் ஆங்காங்கு தடுப்பூசி போடப்படும் முகாம் நடத்தி வருகிறது. அதேபோல உடுமலைப்பேட்டை பகுதியிலும் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. இந்த தடுப்பூசி 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு போடப்படுகிறது. மக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து முகாம்களில் வரிசை எண் படி டோக்கன் கொடுத்து தடுப்பூசியை செலுத்துவதால் மக்கள் கூட்டம் காலை ஆறு மணியிலிருந்து அதிகமாக இருந்தது. அந்தப் பலகையில் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவரும் வரிசையில் நின்றனர்.
காத்துக் கிடந்த மக்களுக்கு 8:30 மணிக்கு பிறகுதான் தடுப்பூசி வரவில்லை என்று தெரியவந்தது. தடுப்பூசி வரவில்லை என தெரிந்தும் வரிசையிலேயே காத்திருந்த மக்களிடம் அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை வாங்கிவிட்டு நாங்களே உங்களை அழைக்கிறோம் என்று அனுப்பிவைத்தனர். நேற்றும் இதே போன்று 500 பேர் தடுப்பூசி போட ஆவலாக காத்திருந்தனர் ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இதனால் அங்கு தடுப்பூசி போடப்படுமா என்ற கவலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.