Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 337…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி உள்ளார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, கூட்டுறவு கடன் உதவி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், முதியோர் உதவி தொகை என மொத்தமாக 337 மனுக்கள் அளித்துள்ளனர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

 

 

Categories

Tech |