ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக துணிநூல் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் 90 பயனாளிகளுக்கு 29 லட்சத்து 97 ஆயிரத்து 979 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கியுள்ளனர்.