மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜவாஹிருல்லா ஓய்வு பெறும் நிலையில் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி மாநில செயற்குழு கூட்டம் தேவதானப்பட்டியில் நடந்தது. த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதற்குப் பிறகு அவர் பேட்டியளித்தார்.
அப்பேட்டியில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனை ஆகியவைகள் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாத நிலையில் அம்மா மினி கிளினிக்கை அரசு தமிழகம் முழுவதும் தொடங்கி வருகிறது.இவைகள் அனைத்தையும் தனியார் மயமாக்கும் திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது .
அதிமுக தோல்வி பயம் காரணமாக திமுகவின் கிராம சபை கூட்டத்திற்கு தடை விதித்துள்ளது. தங்களது கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்து விட்டனர். திரைத்துறையில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள நடிகர்கள் தங்களது அடுத்த பணியான வேலை வாய்ப்பை தேடி அரசியலுக்கு வருகின்றனர்.
இது போன்று வரும் நடிகர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள். என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார். கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்த 1600 நபரின் உடலை சிறந்த முறையில் அடக்கம் செய்த மருத்துவ சேவை அளிக்கும் பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில் கேடயத்தை பரிசாக வழங்கினார்.