மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 54 வழக்குகளுக்கு 3 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விஸ்வநாத், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கீர்த்தனா, முன்னாள் மாவட்ட நீதிபதி செங்கோட்டையன் போன்றோர் வழக்குகளை விசாரித்தனர். அப்போது 145 வழக்குகளில் 54 வழக்குகளுக்கு சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு 3 கோடியே 7 லட்சத்து 13 ஆயிரத்து 523- ரூபாய் வசூலிக்கப்பட்டது.