சேலம் மாநகரில் ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் 25 நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சேலம் மாநகரில் உள்ள தாதகாபட்டி பழைய பேருந்து நிலையம், குகை நெத்திமேடு உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பால் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.