நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு விடுதலை கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் நீர் நிலையின் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மக்கள் விடுதலை கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி தலைவி மரியாள் தலைமை தாங்கியுள்ளார்.
அதன்பின் நிர்வாகிகளான வாசுதேவன், வளர்மதி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து கட்சியின் நிறுவனத் தலைவரான பூபதி மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் நசீரா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, பாஷா, கொளஞ்சி என பலர் கலந்து கொண்டுள்ளனர்.