Categories
மாநில செய்திகள்

மக்கள் யாரும் குறை சொல்லக் கூடாது…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில், கடந்த ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று அதில் தி.மு.க. கூட்டணி அதிக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றி கடந்த 5 மாத ஆட்சியில் செய்த செயல்பாடுகளுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பிரதிநிதிகளாகவும் சேவர்களாகவும் உழைத்திட வேண்டும். அதுமட்டுமில்லாமல் உள்ளாட்சி அமைப்புகளில் கொடுத்துள்ள பொறுப்புகளை உணர்ந்து ஊக்கத்துடன் மக்களுக்குப் பணியாற்றி தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும்.

அதனைதொடர்ந்து மக்கள் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமே அன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக் கூடிய நிலை உருவாகக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தில் மக்கள்தான் நமக்கு எஜமானர்கள் என்றும் தாம் அவர்களுக்கு தொண்டு செய்பவர்கள் என்ற நினைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |