தலைநகர் டெல்லியில் 3 வது நாளாக இன்றும் மழை தொடரும் என்று மாநில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பகல் நேர வெப்பநிலை கணிசமாக குறைந்து 22 டிகிரி செல்சியஸ் என்கின்ற அளவை அடைந்துள்ளது. இதனால் கொடை வெப்ப முழுமையாக தணிந்துள்ளது. கடந்த வாரம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி என்கின்ற அளவு இருந்தது. பொதுவாக டெல்லியில் பருவமழை காலத்தில் மழை நாள் கணக்கில் நீடிக்காது. சிறிது நேரம் கன மழை பெய்தாலும், அதன் பிறகும் மீண்டும் ஒரு சில நேரங்களில் வெயில் அதிகரிக்கும். இந்த வழக்கத்துக்கு மாறாக சென்ற வெள்ளிக்கிழமை இரவு முதல் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
கடந்த 48 மணி நேரங்களில் அடிக்கடி மழை விட்டு விட்டு பெய்த நிலையில், அதே நிலை தொடரும் என்றும், மதியம் மற்றும் மாலையில் இடியுடன் கூடிய கன பொழியலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில், வட இந்தியாவில் மழை தொடரும் என மாநில ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தலைநகர் டெல்லி மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லியில் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து இன்று அலுவலகம் மீண்டும் செயல்படும் நிலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.