Categories
தேசிய செய்திகள்

மக்களே அலெர்ட!….. பால், இறைச்சி விலை உயரும் அபாயம்…. என்ன காரணம் தெரியுமா….?

இந்தியாவில் மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக பயிர் செய்த ஏற்பட்டுள்ளதே தீவனங்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தீவனங்களின் மொத்த விஐ பணவீக்கம் 25.54% என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகால உச்சமாகும். அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே தீவனத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பால் மற்றும் இறைச்சி விலை நேரடியாக உயர்கிறது.

மழையின் காரணமாக பயிர் சேதம் மட்டுமில்லாமல் வடமாநிலங்களில் வைக்கோல் எரிப்பு காரணமாகவும் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனையடுத்து எள்ளு புண்ணாக்கு விலை இரு மடங்கு அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.3000 விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பச்சை தீவனங்களின் விலை உயர்ந்த உயர்ந்துவிட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். கோதுமை வைக்கோல் விலை குவிண்டால் ரூ.2000 என விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போல கிலோ 5 முதல் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வைக்கோல் தற்போது 15 முதல் 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பால் மற்றும் இறைச்சி விலையும் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் பால், இறைச்சி விலை உயரும் இதனால் குடும்பங்களுக்கு செலவும் சுமையும் அதிகரிக்கும்.

Categories

Tech |