பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஆணையாளர் கிறிஸ்துராஜா புதிய ஏற்பாட்டை செய்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக ஆணையாளர் கிறிஸ்துராஜா என்பவர் புதிய அறிவிப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ஆணையாளர் கிறிஸ்துராஜா இந்த அறிவிப்பை அதிகாரிகள் முறையாக பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை கண்டறிய ஆய்வை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியது சேலத்தில் மண்டலம் மற்றும் கோட்டங்கள் அடிப்படையில் பணி புரியும் அலுவலர்களின் பெயர், பொறுப்பு மற்றும் செல்போன் எண்களை 60 முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சாலை பராமரிப்பு, குடிநீர் வினியோகம் ,சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் முறையாக செயல்படுத்தாமல் இருந்தால் அதை உடனடியாக அலுவலர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூறலாம் என்று தெரிவித்துள்ளார். அந்தத் தகவலை அறிந்ததும் அதிகாரிகள் உடனடியாக குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே பொதுமக்கள் எந்த குறைவாக இருந்தாலும் அலுவலர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.