சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதன்படி தற்போது வழிப்பறி, திருட்டு சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் காவலன் ஆப் அல்லது 112 மற்றும் 110 ஆகிய அவசர எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுதும் போலீசார் யாரும் தங்க நகைகளை கழற்றி பையில் பத்திரமாக வைத்து செல்லுங்கள் என்று சொல்வதில்லை. ஆனால் அதனைப் போல சிலர் கலவரம் நடக்கும் என்று கூறி நகைகளை கழற்றி பத்திரமாக பையில் வைக்குமாறும் மக்கள் கவனத்தை திசை திருப்பி ஏமாற்றி திருடுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பண நோட்டுகளை கீழே போட்டு பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி பணம் மற்றும் தங்க நகைகளை திருடும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்படும் நபர்களை பற்றி தெரிந்தால் காவலன் ஆப் அல்லது 100 மற்றும் 112 ஆகிய அவசர எங்களின் மூலம் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த தகவலின்பேரில் உடனே காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.