வெளிநாட்டில் இருந்து வந்த 1455 பேர் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் பரவி வரும் புதுவித கொரோனாவால் உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கிறது. சுகாதாரத்துறையினர் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இதுவரை சேலம் மாவட்டத்திற்கு லண்டனில் இருந்து 26 பேர் வந்துள்ளனர். அதில் 25 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இன்னும் ஒருவரின் தகவல் வெளியாகவில்லை. அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு அவர் அனுப்பப்பட்டார்.
துபாய், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்து 1455 பெயர் தமிழகத்திற்கு வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் கண்டறியப்பட்ட 615 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. 612 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்றும், மற்ற மூன்று பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. 2ஆண்களும் 1 பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களில் இரண்டு பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மீதமுள்ள 840 பெயரை சுகாதாரத் துறையினர் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையினரும் அவர்களைப் பற்றிய விவரங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.