Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… கிளம்பிருச்சு அடுத்த வைரஸ்… கடும் எச்சரிக்கை…!!!

பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து தற்போது மீண்டு வரும் பொழுது  திடீரென பிரித்தானியாவில் உருமாற்றம் கொண்ட இன்னொரு கொரோனா வைரஸ் பரவுவதாக அந்நாட்டின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவரை 16 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

லிவர்பூலின் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட புதிய தொற்றின் கூறுகள் இந்த வைரஸ் தொற்றிலும்   இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் பிரேஸிலில் காணப்பட்ட வீரியம் மிகுந்த தொற்றின் கூறுகள் இதில் காணப்படவில்லை என்று வல்லுநர்கள் உறுதிப்படுத்தினார். பிப்ரவரி 15 ஆம் தேதி புதிய உருவெடுத்த கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேர்களையும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும்  தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அறிவுரை வழங்கப்பட்டது.

இதுவரை பிரித்தானியாவில் 4 உருமாற்றம் கொண்ட கொரோனா  வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்பட்டு  உறுதிசெய்துள்ளனர் . அதனை வல்லுனர்களால் முன்னெடுத்து ஆய்வு செய்து வருகிறது. இதனையடுத்து லிவர்பூல் நகரம் பிராந்தியம், வாரிங்டன், பிரஸ்டன் மற்றும் மேற்கு லாங்காஷயர் போன்ற இடங்களில் 58 பேருக்கு உருமாற்றம் கொண்ட புதிய கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது .

Categories

Tech |