சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்தால் இனி 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மெரினா கடற்கரை மட்டும் திறக்கபடாமல் இருந்தது. கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் மாநகராட்சி கடற்கரையை திறக்க மறுத்தது. கடந்த மாதம் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்களை மீது மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இன்று காலை முகக்கவசம் அணியாமல் கடற்கரைக்கு வந்தவர்கள் அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் முகக் கவசம் அணியாமல் வந்ததற்காக 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் மெரினா கடற்கரையில் மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி மற்றும்சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.