Categories
உலக செய்திகள்

உலகப்போரில் இறந்தவர்களை விட… “கொரோனாவால் தான் அதிகளவு மக்கள் உயிரிழந்துள்ளனர்”… ஜோ பைடன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்க மக்களிடம் அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 1 வருடத்திற்கு மேலாகி விட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன்,தென் ஆப்பிரிக்கா  போன்ற இடங்களில் வைரசின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா குறித்து உரையாற்றிய நிகழ்ச்சி மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, ” நாம் ஒரு ஆண்டிற்கு முன்பு கொரோனா என்னும் கொடிய வைரசால் தாக்கப்பட்டோம்.

அந்த தொற்றை தடுப்பதற்கான வழி முறையை கையாளாமல் உயிர்ப்பலிகள்,  மன அழுத்தம், தனிமை போன்றவை ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டு குடும்ப உறுப்பினர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பெரும் நினைவாக மாறியது. 2020ஆம் ஆண்டு மிகுந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வாழ்வாதாரமே தொலைந்து விட்டது . இருப்பினும்  நாம் நன்றிக்கடன், பாராட்டு, மரியாதை என சில நல்ல விஷயங்களையும் அந்த இக்கட்டான சூழலில் பெற்றிருந்தோம்.

அமெரிக்கா என்றுமே இருட்டில் வெளிச்சத்தை தேடக்கூடிய ஒரு உத்வேகம் மிகுந்த நாடு. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளனர். இது இரண்டு உலகப் போர்கள், வியட்நாம் போர் செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல் போன்றவற்றில் உயிரிழந்த மொத்த மக்கள் தொகையில் எண்ணிக்கையை விட இது அதிகம் தான். இந்த கொரோனாவால் குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்கள், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள் என அதிகமானோர் தனிமையில் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |