Categories
உலக செய்திகள்

மக்களுக்கு கவலை வேண்டாம்…. கொரோனா தடுப்பு மருந்தை அரசே வினியோகிக்கும்…!!

கொரோனா தடுப்புமருந்து வந்ததும் அதை அரசே கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் என்றும் பொதுமக்கள் தனியாக வாங்க வேண்டியதில்லை என்றும் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருக்கின்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், வெற்றிகரமான முறையில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றது. அந்த பரிசோதனை முடிவுகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில், தனது கூட்டாளி நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தினை தேர்வு செய்திருக்கின்றது. இத்தகைய  ஒப்பந்தத்தின் படி, இந்தியா மற்றும் 70 குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்காக சீரம் நிறுவனம் 100 கோடி ‘டோஸ்’ உற்பத்தி செய்ய உள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் 30 கோடி முதல் 40 கோடி வரை ‘டோஸ்’ உற்பத்தி செய்வதற்கு  இலக்கு நிர்ணயித்திருக்கின்றது.

இந்நிலையில் பார்சி இனத்தை சேர்ந்த இந்திப்பட அதிபர் ரோனி ஸ்குருவாலா, சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி பார்சி இனத்தை சேர்ந்த அடார் பூனவல்லாவிடம் ‘டுவிட்டர்’ மூலமாக ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “பார்சி இனத்தவர் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி வந்தவுடன், அவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டா?” என வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு ‘டுவிட்டர்’ மூலம் பதில் கூறிய அடார் பூனவல்லா, “பார்சி இனத்தினருக்கு தேவைக்கு அதிகமாகவே ‘டோஸ்’ வைத்திருப்போம். எங்கள் நிறுவனத்தினுடைய  ஒரு நாள் உற்பத்தி திறனே பூமியில் இருக்கின்ற எல்லா பார்சிக்களுக்கும் போதுமானதாக இருக்கும்” என பதில் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து  பார்சிக்களுக்கு எவ்வளவு ‘டோஸ்’ வைத்திருப்பீர்கள் என ஒரு செய்தி நிறுவனம் கேட்டது. அதற்கு சீரம் இன்ஸ்டிடியூட்டின் செய்தித்தொடர்பாளர் பதில் கூறினார்.  அது, 2 பார்சிக்களுக்கு இடையில் நடந்த நட்புரீதியான உரையாடல்தான். தடுப்பூசி வந்தவுடன் அனைவருக்கும் கிடைக்கும். அதுக்குறித்து தற்போது பேச வேண்டாம். அரசு கொள்முதல் செய்து வினியோகம் செய்யும். பொதுமக்கள் எவரும் நேரடியாக வாங்க வேண்டிய அவசியமில்லை என பதில் கூறினார்.

 

Categories

Tech |