அமைச்சர் விஜயபாஸ்கர் தளர்வுகள் அதிக அளவில் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தளர்வுகள் அதிகளவில் இருக்கும் நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், எனவும் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுவாக இந்த தமிழ்நாடு முழுக்க இந்தக் கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தலைமை மருத்துவமனையில் மற்ற எந்த சேவைகளும் பாதிக்காமல் மிக சிறப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாருமே அறப்பணி தொடர்போடு பணியாற்றுகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் என்பது மிக அவசியம். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். பொதுவாக குறையில்லாத குழந்தைகளை உருவாக்க வேண்டும் அதுதான் முக்கியம் என கேட்டுக் கொண்டுள்ளார்.