Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்கும் குப்பைகளை வைத்து…. இதை தயார் பண்றோம்…. கலெக்டரின் தகவல்….!!

மக்கும் குப்பைகள் மூலமாக உரம் தயாரிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 15,036 குடியிருப்பு மற்றும் 3,965 வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வீடுகள், கடைகளில் உருவாகும் குப்பைகளில் மக்கும் குப்பை,மக்கா குப்பை என தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்கள் கொண்டு சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நெய்விளக்குதோப்பு பகுதியிலுள்ள 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் இந்தப் பகுதிகளிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 12 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து காலணிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி பயன்பாட்டிற்காகவும், மேலும் சிறுகற்கள் கட்டிட கட்டுமான தொழில்களுக்கும், மக்கும் குப்பைகள் மூலம் உரங்களும் தயாரிக்கப்படுகின்றது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் பாலச்சந்திரன், துணை கலெக்டர் தனலட்சுமி, நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் சண்முகம், மேலாளர் முத்துக்குமார், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பெரும்பாலானோர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |