சென்னையில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் கொசு கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கக்கூடிய வகையில் சென்னை மாநகராட்சி “கொசுவலை திட்டத்தை” கொண்டு வந்துள்ளது. அதற்காக 2,50,000 கொசு வலைகள் தயாராக இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளரிடம் பேசிய மேயர் பிரியா, கொசுவலை திட்டம் ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சாலை வசிக்கும் மக்களுக்கும் நீர்நிலைகளை ஒட்டி உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கும் கொசுவலைகள் வழங்கப்பட உள்ளது
கடந்த 10 நாட்களாக சென்னையில் கன மழை பெய்து வந்தாலும் குடியிருப்புகளில் மழை தேங்காமல் இருக்க மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து நீர் தேங்க கூடிய இடங்களில் தினமும் கொசு புகை அடிக்கப்பட்டு வருகிறது. சாலையில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2 ஆம் தேதி இருந்து உணவு வழங்கப்படுகிறது. வடிகால் பணிகள் நடந்து வருவதால் சாலைகளில் குண்டு குழிகள் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் சீரமைக்கப்படும் என்றும் ஜனவரி மாதம் முதல் சாலை போடும் பணிகள் தொடங்கப்படும். இதனையடுத்து கடந்த ஆண்டு மழைக்காலத்தில் கழிவு நீரும் மழை நீரும் தேங்கி இருந்தது. ஆனால் இப்போது எங்கேயும் கழிவு நீரோ மழை நீரோ நிற்கவில்லை. உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சென்னை பாதுகாப்பாக உள்ளது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.