ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுவது தொடர்பாக உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிதக்கா பகுதியில் அம்மையப்பன் நகர் உள்பட 3 கிராமப் பகுதிகளுக்கு செல்ல ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாதைகள் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நின்று குளம் போல் இருப்பதினால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் செல்வதற்கு அவதிப்படுகின்றனர்.
இது பற்றி துறை அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் சேர்ந்து ரயில்வே துறையினருக்கு தெரிவித்திருந்த நிலையில் சீனியர் இன்ஜினியர் சுரேஷ் மற்றும் கணேசன், ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் அன்கித் வர்மா அப்பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.