Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மழை நீரில் மூழ்கிய சாலை…. பொதுமக்களின் கோரிக்கை…. கவுன்சிலரின் செயல்….!!

தொடர் கனமழை காரணத்தினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சாலை மூழ்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டேரி ஊராட்சி ஜண்டாகாரன் வட்டம்  அருகாமையிலிருக்கும் பூசாரி வட்டம் பகுதியில் 70-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல மண் சாலை இருக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் சாலை மூழ்கியது.

இதனையடுத்து வாகனங்களில் வருவோர் மண் சாலையில் செல்ல முடியாமல் அருகில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் வாகனங்ககளை நிறுத்திவிட்டு முழங்காலளவு மழை நீரில் இறங்கி நடந்து சென்று வருகின்றனர். இதனால் மண் சாலையில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற கோரி ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலாஆஞ்சியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் அங்கு தேங்கியிருந்த மழை வெள்ளத்தை அகற்றுவதற்கான தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

Categories

Tech |