மலைப் பாதையில் பேருந்து நிற்காமல் செல்வதால் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சத்திரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்றால் மலைப்பாதை வழியே வரும் அரசு பேருந்தில் ஏற வேண்டும். ஆனால் அவ்வழியாக வரும் அரசு பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வது இல்லை. இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் துறையினரும் மற்றும் காவல்துறையினரும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.