Categories
மாநில செய்திகள்

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. நிவாரணம் வழங்க உத்தரவு…. முதல்வரின் அதிரடி நடவடிக்கை….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் மழை பொழிவானாது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழையானது பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதேபோன்று புதுச்சேரியிலும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் உரிமைகள் சேதமடைந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணமாக 25,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழையானது பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் நெல்லூர், சிங்கராயகொண்டா, கவாலி போன்ற பகுதிகளில் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் ஆந்திராவில் உள்ள கஜுவாகாவில் 19 mm மழை அளவானது பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அதில் கூறியதாவது “மழை அதிகம் பெய்து வருவதால் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக முகாம்களை அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பேரிடரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

Categories

Tech |