Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருங்க! நான் முதலில் போறேன்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!

வேலைக்கு சென்ற பெண் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் விஜயா அதே பகுதியில் வசிக்கும் ராம்தாய் உள்பட 3 பேருடன் அருகாமையில் இருக்கும் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அதன்பின் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென கனமழை பெய்த காரணத்தினால் அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது தோட்டம் அருகாமையில் இருக்கும் பள்ளத்தில் குறைவான அளவு தண்ணீர் செல்வதை நம்பி விஜயா முதலாவதாக பள்ளத்தில் இறங்கி கடக்க முயற்சி செய்த நிலையில் அதிகமான நீர் பெருக்கெடுத்து ஓடியதில் அவர் திடீரென மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை கண்ட அவருடன் வேலை பார்ப்பதற்கு வந்த மற்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அந்தப் பெண்கள் விரைந்து சென்று விஜயாவின் கணவரிடம் தெரிவித்துள்ளனர். அதற்குப்பிறகு காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு அவரின் கணவன் மருதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்  பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |