மலைக்கு மீண்டும் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை ஏழை மக்களின் ஊட்டி என அழைக்கப்படுகின்றது. இந்த மலைக்கு பல மாநிலங்களில் வசிக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் சமூக விரோதிகள் மலைக்கு வந்து மது அருந்தி விட்டு புகை பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விட்டு சென்றதால் சிறிய அளவில் பற்றிய காடு மளமளவென பற்றி எரிந்தது.
இதனால் பல அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி, கொடிகள், காட்டுப் பகுதியில் வசிக்கும் உயிரினங்கள் போன்றவை தீயில் கருகி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்த வனசரகர் பரந்தாமன் தலைமையிலான வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இதனை அடுத்து காட்டுத் தீயானது மளமளவென பரவி மழையின் மேல் பகுதிக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து காட்டுக்குத் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டும், பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.