Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு…. விவசாயிகளின் கோரிக்கை….!!

நிலத்திற்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுவதால் விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து அதனை பராமரித்து வந்தனர். இந்நிலையில் இதனுடன் மணிலா மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதன்பின் மழை பெய்ததால் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விளை நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றுள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள் நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்குப்பிறகு இது பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது, ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் பெரும்பாலானவர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி இருக்கிறது. இதில் பல கிராமங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்கால்களை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து இருக்கின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணத்தினால் விவசாயிகள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி அனைத்து கிராமங்களில் ஆக்கரமிப்பு செய்து வைக்கப்பட்டிருக்கும் வடிகால் வாய்க்கால்களை மீட்டு தூர்வாரி வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் மழை நீருக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைநீரால் அழுகிய பயிர்களை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |