மாங்காய் மண்டி அருகில் மழை நீர் சூழ்ந்து காய்கறிகள் நனைந்ததால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பழைய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி கிடந்தது. எனவே இந்த கனமழையால் மாங்காய்மண்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்தவிற்பனை காய்கறி கடை பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது.
இதனால் தக்காளி, வெங்காயம் என 150 டன் காய்கறிகள் மழை நீரில் நனைந்ததால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே காய்கறிகளை வாங்க வருபவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு மாங்காய் மண்டி அருகில் மழை நீர் சூழ்ந்து காய்கறிகள் நனைந்ததால் இந்த இடம் காய்கறி கடை அமைப்பதற்கு உகந்தது இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.