Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. வனத்துறையினரின் முயற்சி…!!

16 அடி நீள மலை பாம்பை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளையனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் சுமார் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையில் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து விட்டனர். அந்தப் பாம்பு அதிக அளவில் சாப்பிட்டதால் வேகமாக ஊர்ந்து செல்ல முடியாமல் மெதுவாக சாலையில் சென்றுள்ளது. அதன் பிறகு அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Categories

Tech |