ஊருக்குள் நுழைந்த மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருக்கேபள்ளி கிராமத்தில் இருக்கும் புதரில் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. மேலும் இந்த மலைப்பாம்பு அப்பகுதியில் இருந்த ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.
இதனைத்தொடர்ந்து குருபரப்பள்ளி அருகே இருக்கும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மரத்தின் மேல் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த மலைப் பாம்பை பிடித்து காட்டில் கொண்டு விட்டனர்.