சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் தரைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். மற்றொரு புறம் அப்பெண்ணின் பின்னால் 10 ஆடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இருப்பதை வீடியோவில் நாம் காணலாம்.
இதற்கிடையில் அந்த பெண் பாம்பு பின்னால் இருப்பதை கவனிக்காமல் தன் வேலையை செய்துக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில் திடீரென்று அந்த பாம்பின் மீது அப்பெண் விழுகிறார். அதன்பின் உஷாரான அந்த மலைப் பாம்பு சில நொடிகளில் அந்த பெண்ணை தாக்க முயற்சித்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
#Trending #Snake pic.twitter.com/rDlA1ZPHmY
— Yahoo Feed (@YohoFeed) December 28, 2022