மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோல் கிராம நிர்வாக அலுவலகம் முதல் புதுவீட்டுவிளை வரை 2 1/2 கி.மீ நீளத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்து நிருபர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்த மாவட்டத்தில் ஏ.வி.எம். கால்வாய் கடலோர மக்களின் பாதுகாப்பு அரணாகவும், நன்னீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது. எனவே பல ஆண்டுகளுக்கு முன் இந்த கால்வாய் நீர் வழி போக்குவரத்தாகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது கால்வாய் கரை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவுநீர் கலந்து மாசுபட்ட நிலையில் இருக்கின்றது. இதனால் குளச்சல் முதல் மண்டைக்காடு வரை ஏ.வி.எம். கால்வாயை சீரமைப்பதற்கு முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கான திட்ட மதிப்பு தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்த திட்ட அறிக்கையை இன்னும் சில வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்து விரைவில் திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனையடுத்து பேச்சிப்பாறை அணை பொருத்தவரை பாதுகாப்பு சுவர் பராமரிப்பு மத்திய அரசை சார்ந்தது. ஆகவே தற்போது அணையின் முழு கொள்ளளவு நீர் இருக்கின்றது. இந்நிலையில் அணையை தூர் வாருவது சற்று கடினமானதாகும். எனவே வருகின்ற காலகட்டத்தில் தேவையை கருத்தில் கொண்டு உரிய அனுமதி பெற்று அதற்குரிய வேலைகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகுதியான மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே பட்ட வழங்கிய பின் மலைவாழ் மக்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது.
இதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறை முதல் கோதையாறு செல்லும் மலைப்பாதை மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. எனவே தற்போது சாலையை சீரமைக்க மின்சார வாரியம் 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சாலயிணை மின்சார வாரியத்திடம் இருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்ட பின் நிச்சயமாக சாலைகள் சீரான முறையில் பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். அதன்பின் குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காபரம்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் படி 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு பாலர் பள்ளியை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மரிய சிசுகுமார், செறுப்பால் ஊராட்சி தலைவர் அனிஸ் அய்யப்பன், காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜீ மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.