Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழையால்…. இப்படி ஆயிட்டு…. சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தது விவசாயிகளிடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் காற்று வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.

இதனையடுத்து மழையால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் மற்றும் மகசூலையும் பெரிதும் பாதிக்கும் என விவசாயிகள் சோகத்தில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |