Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு பெரிய இழப்பு… அதிகாரிகளின் அலட்சியம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான் நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாக காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் கொட்டாரம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் நெல்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூட்டைகளை அதிகாரிகள் நிலையத்தில் அடுக்கி வைத்து இருந்திருக்கின்றனர்.

அதன்பின் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்காமல் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. இதில் அரசுக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் அலட்சியமாக இருந்த அதிகாரியிடமிருந்து இந்த இழப்பீட்டுத் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளை வீணாக்காமல் கொள்முதல் செய்த உடன் சேமிப்புக் கிடங்கு அதிகாரிகள் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து கொள்முதல் நிலையங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |