Categories
மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் நகரம்…. களப்பணியில் மீட்புக்குழுவினர்…. காப்பாற்றப்பட்ட உயிரினங்கள்….!!

மழையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கையாள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் களமிறங்கியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்படும் இடர்பாடுகளை கையாளுவதற்காக சென்னையில் உள்ள 42 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களில் இருக்கும் 1,000 தீயணைப்பு வீரர்கள் களப்பணியில் உள்ளனர்.

இவர்கள் நீரை வெளியேற்றுவது மற்றும மீட்பு பணியில் ஈடுபடுவது ஆகியவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் கடந்த நான்கு நாட்களாக 156 குடியிருப்புகளில் தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் அகற்றியுள்ளனர். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தினால் சிக்கித் தவித்த குழந்தைகள், முதியவர்கள் என மொத்தம் 430 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதிலும் 97 பகுதிகளில் சாலையில் விழுந்த மரங்களை மின்விசை ரம்பங்கள் மூலமாக அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்களால் 82 உயிரினங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதனை அடுத்து 64 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் அணைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், பீர்க்கன்கரணை, வேளச்சேரி பகுதியில் வெள்ளத்தில் தத்தளித்தவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்கின்றனர்.

Categories

Tech |