Categories
உலக செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலையில் மலாலாவும், கிரேட்டாவும் சந்திப்பு.!

பெண் கல்விக்காக போராடி வரும் மலாலாவும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டாவும் லண்டனில் சந்தித்து பேசினர்.

பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருபவர் கிரேட்டா தன்பெர்க் (வயது 17). அதேபோல பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா யூசப்சாய் (வயது 22). இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரிஸ்டல் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்காக கிரேட்டா லண்டன் சென்றுள்ளார். அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பயின்று வரும் மலாலாவை கிரேட்டா சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய போராட்டம் குறித்தும் அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார் கிரேட்டா. இந்த சந்திப்பின் போது புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மலாலா பதிவிட்டுள்ளார். மேலும் கிரேட்டாவுக்காக மட்டுமே தனது வகுப்புகளை தவிர்ப்பேன் என்றும்  தெரிவித்துள்ளார். அதேபோல கிரேட்டா தன்பர்க்கும் தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B8_o71enY3s/?utm_source=ig_web_button_share_sheet

https://www.instagram.com/p/B8_6MM-pjsh/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |