அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு பாகிஸ்தானியர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண் கல்வி ஆர்வலரான மலாலா யூசுப்சாய் (25), பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய உயர் அதிகாரியான அஸர் மாலிக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதாவது கடந்த 2012-ம் ஆண்டு மலாலா பாகிஸ்தானில் கல்விக்காக போராடிய நிலையில் தலிபான்களால் சுடப்பட்டார்.
அதன் பின்னர் மலாலாவின் திருமணம் பிரித்தானியாவில் மிகவும் சாதாரணமாக நடந்துள்ளது. ஆனால் மலாலா அண்மையில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை ஆதரித்து கருத்து ஒன்றினை கூறியிருந்தார். இந்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மலாலா திருமணம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.