Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாலத்தீவு மதுபாரில் ‘வார்னர் -மைக்கேல் ஸ்லேடர் இடையே சண்டையா …? வெளியான தகவல்…!!!

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின்  முன்னணி வீரரான டேவிட் வார்னருக்கும், ஆஸ்திரேலியா வர்ணனையாளரான மைக்கேல் ஸ்லேடர் இருவருக்கும்  இடையே, மதுபாரில் மோதல் ஏற்பட்டு, பின் கைகலைப்பாக மாறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்துள்ளனர்.  ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும், சண்டை வருவதற்கான வாய்ப்பில்லை’, என்றும் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளதாக,  செய்திகள்  வெளியாகி உள்ளது .

Categories

Tech |