மலையாள முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான முகேஷ் மற்றும் அவரின் மனைவி தேவிகா இருவரும் விவாகரத்து பெறவுள்ளனர்.
மலையாள நடிகரான முகேஷ் தமிழில் ஐந்தாம்படை, மனைவி ஒரு மாணிக்கம், பொன்னர் சங்கர் மற்றும் ஜாதிமல்லி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்திலும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சரிதா என்ற நடிகையுடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண முறிவு ஏற்பட்டது. அதன் பின் முகேஷ் தேவிகா என்ற பரத நாட்டிய கலைஞருடன் 8 ஆண்டுகளாக திருமணம் பந்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது தேவிகா முகேஷ்க்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த விவாகரத்து குறித்து கூறிய தேவிகா ” 8 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்தும் என்னால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆயினும் என்னால் புரிந்து கொள்ள முடியாது. எனக்கு அவர் மீது எந்தவித கோபமும் இல்லை. இது என்னுடைய சுய விருப்பம். விவாகரத்து பெற்ற பின் என்னுடைய நிலைமை கடுமையாக இருக்கும் அதுமட்டுமின்றி அவரின் பெயரில் எந்த வன்கொடுமை மற்றும் அரசியல் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை” என்றும் கூறியுள்ளார். குறிப்பாக முகேஷ் கேரளா மாநிலத்தின் MLA வாக உள்ளார். இந்த செய்தியானது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.