சிறிய வகை பயிற்சி விமானம் ஒன்று மலையின் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வடக்கே கேசர்வான் மாகாணம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி உட்பட 2 பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பை இழந்துள்ளது.
அதன்பின் விமானம் கேசர்வான் மாகாணத்திலுள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.