மலேசியாவிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகள் அடுத்த மாதத்திலிருந்து தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மலேசியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து பிற நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அடுத்த மாதத்திலிருந்து பிற நாட்டு மக்களுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அந்த வகையில் மலேசிய அரசு, பொது போக்குவரத்து, சமூக கூட்டங்கள், வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடிய நேரம் போன்றவற்றிற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இனிமேல் தளர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.