Categories
உலக செய்திகள்

மக்களின் உடல்வெப்பநிலையை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.. மலேசியா அசத்தல்..!!

மலேசியாவில் தெரெங்கானு என்ற மாநிலத்தில் ட்ரோன்கள் மூலமாக பொது வெளிகளில் மக்களின் அதிகமான உடல் வெப்பநிலை கண்டறியப்படுகிறது.

மலேசியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தொலைவிலிருந்தே மக்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரோன்கள் தரையில் சுமார் 20 மீட்டர் தொலைவிலிருந்து, அதிக வெப்பநிலை உடைய மனிதர்களை கண்டறிந்து விடும். அப்போது உடனடியாக சிவப்பு நிற எச்சரிக்கை ஒளியானது, காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்படும்.

அதன் பின்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள். அதாவது கொரோனாவின் இந்த அலையானது எளிதில் கண்டறிய முடியாத வகையில் பரவும் என்று சுகாதார இயக்குனர் ஜெனரல் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனவே தான் இந்த பாதுகாப்பான நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories

Tech |