மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஊழல் புகாரில் நீதிமன்றம் 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தான் ஆட்சியில் இருந்த போது, 1 எம்.டி.பி என்ற அரசாங்க முதலீட்டு நிதி அமைப்பில் 4500 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவினர் அவரின் சொத்துக்களை ஆய்வு செய்தனர்.
அதிலிருந்து அதிகமான நகைகளும் பணமும் மீட்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 12 வருடங்கள் சிறைதண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த விசாரணை முடிவடைந்திருக்கிறது.
இறுதி தீர்ப்பில் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பான 12 வருட சிறை தண்டனையை உறுதிப்படுத்துவதாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.