மாலத்தீவு அதிபர் தங்களுக்கு உதவிகள் அளித்து வரும் இந்தியாவிற்கு, பாராட்டுகளையும் நன்றியையும் கூறியிருக்கிறார்.
மாலத்தீவின் அதிபரான இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்திருப்பதாவது, கடந்த இரண்டு வருடங்களில் பல சூழ்நிலைகளில் இந்தியா மாலத்தீவிற்கு அதிக உதவிகளை செய்திருக்கிறது. அதிகமாக தடுப்பூசிகள் அளித்திருக்கிறது. எங்களின் பொருளாதாரத்தை மீட்க 25 கோடி டாலர் மதிப்புடைய நிதி பத்திரங்களை இந்தியா வாங்கியிருக்கிறது.
மாலத்தீவில் சுகாதார சேவைகளை அளிக்க தேவைப்படும் பல உபகரணங்கள் இந்தியாவிடமிருந்து வாங்கியிருக்கிறோம். அதே சமயத்தில், சுற்றுலா பயணிகளுக்கான வருகையை உறுதிப்படுத்த, இரண்டு நாடுகளுக்கிடையே ஒரு பயண தாழ்வாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அவசர மருத்துவ சிகிச்சைக்காக தங்கள் மக்கள் இந்தியாவிற்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு எளிதான நடைமுறையை இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில், எங்களின் முயற்சிக்கு உதவி புரிந்தது, எங்கள் நட்பு நாடாக விளங்கும் இந்தியாவிற்கு தங்கள் நாட்டு மக்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.